தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அமெரிக்க அமைச்சர் அழைப்பு
வாஷிங்டன்:
 
லங்கைக்கு எதிராக ஐ.நா.மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ள நிலையில் எந்த தீர்மானத்தையம் நிறைவேற்ற மாட்டேன் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே அவேசமாகத் தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில் இலங்கையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளை அமெரிக்காவிற்கு வருமாறு அந்நாட்டு வெளியுறவு செயலாளர் ஹிலாரி கிளிண்டன் அழைத்துள்ளார்.

ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா நிறைவேற்றிய தீர்மானம் குறித்துப் பேச இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸை அமெரிக்கா அழைத்துள்ள அதே நேரத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் அமெரிக்காவிற்கு வருகை தருமாறு ஹிலாரி அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கை