இலங்கையில் தமிழர் பகுதிகளில் ஆய்வு சுஸ்மா சுவராஜ் தலைமையில் எம்.பி.க்கள் குழு பயணம்
கொழும்பு:

லங்கையில் தமிழர்களின் நிலையை நேரில் கண்டறிய, சுஷ்மா சுவராஜ் தலைமையில் அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழு அடுத்த மாதம்  (16-04-12 )இலங்கை செல்கிறது.

இலங்கையில் தமிழர் பகுதிகளில் ஆய்வு சுஸ்மா சுவராஜ் தலைமையில் எம்.பி.க்கள் குழு இலங்கை செல்கிறது. அங்கு தமிழர்களின் நிலை குறித்தும், இந்திய அரசின் பல ஆயிரம் கோடி நிதி பயன்படுத்தப்படுவது குறித்தும் ஆய்வு செய்கிறது.  இலங்கையில் மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இந்த பயணம் நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இது குறித்து பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் நிருபர்களிடம் கூறியது: இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழுவுக்கு நான் தலைமை தாங்கி செல்கிறேன். இந்த குழுவினர் அடுத்த மாதம் 16 ந் தேதி புறப்பட்டு செல்கிறார்கள். 21 ந்தேதி திரும்புகிறோம். இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் நடைபெற்று இருக்கும் நிவாரண பணிகளை எம்.பி.க்கள் பார்வையிடுகிறார்கள். தமிழர்களின் வாழ்க்கை நிலையை நேரில் பார்க்கிறோம்.

பாரதீய ஜனதா சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் பிரகலாத் ஜோஷி, மேல் சபை உறுப்பினர் வெங்கையா நாயுடு ஆகியோர் இந்த குழுவில் இடம் பெறுகிறார்கள். எம்.பி.க்கள் குழுவின் இலங்கை பயணத்துக்கான ஏற்பாடுகளை பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பவன் குமார் பன்சால் செய்து வருகிறார். இவ்வாறு சுஷ்மா சுவராஜ் கூறினார்.
இலங்கை