அரசு மருத்துவ காப்பீட்டில் முகாம் தமிழர்களை சேர்க்க முதல்வர் ஜெ.உத்தரவு
சென்னை:
 
கதிகள் முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களையும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:தமிழகத்திலுள்ள அகதிகள் முகாம்களிலிருந்து கல்லூரிகளில் உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.

பி.ஏ. பயில்வோருக்கு ரூ.1200, பி.எஸ்.சி., படிப்போருக்கு ரூ.1250, முதுகலை பயில்வோருக்கு ரூ.1,330, எம்.எஸ்.சி., படிப்போருக்கு ரூ.1650, தொழில்நுட்பக் கல்வி பயில்வோருக்கு ரூ.850, பி.இ., படிப்போருக்கு ரூ.2,750, மருத்துவம் படிப்போருக்கு ரூ.4,700, கால்நடை மருத்துவம் படிப்போருக்கு ரூ.1,400, பி.எல். படிப்போருக்கு ரூ.860, வேளாண்மை அறிவியல் படிப்போருக்கு ரூ.2,850 ஊக்கத் தொகையாக வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதன் மூலம் ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவர். இதற்காக அரசுக்கு ரூ.20.98 லட்சம் கூடுதல் செலவு ஏற்படும்.இலங்கை அகதிகள் முகாம்களில் செயல்படும் 416 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் மானியத் தொகை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதனால் அரசுக்கு ரூ.41.60 லட்சம் செலவு ஏற்படும். முகாம்களில் குடிநீர் வசதியை மேம்படுத்த ரூ.4.33 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.வீடுகளைப் பழுதுபார்த்தல், சாலைகளைச் சீரமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.20.66 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காப்பீட்டுத் திட்டம்: தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அகதிகள் முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் விரிவுபடுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை