ராஜீவ் காந்தியை படுகொலை செய்தது அமெரிக்காதான்: இலங்கை அமைச்சர் பகிரங்கக் குற்றச்சாட்டு
கொழும்பு:
 
ந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அமெரிக்காவுக்கு தொடர்பு உள்ளதாக இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம்சாட்டியுள்ளார்.

அமெரிக்க உளவுப் பிரிவான சிஐஏ திட்டத்தின்படிதான் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தானாகவே முட்டாள்தனமான தீர்மானங்களை எடுத்திருக்கமாட்டார் என விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், “ராஜீவை படுகொலை செய்வதன் மூலம் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஏற்படக் கூடிய பாதக நிலைமைகள் குறித்து பிராபகரன் கவனம் செலுத்தாமல் இருந்திருக்க முடியாது. பிரபாகரனுக்கு தெரியாமல் தமிழகத்தில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளிடம் அமெரிக்க உளவுப் பிரிவு, ராஜீவை படுகொலை செய்யும் ஒப்பந்தத்தை ஒப்படைத்திருக்க வேண்டும் என்பதே தமது நம்பிக்கை” என்றார்.

காந்தி குடும்பத்தினர் இந்தியாவை ஆட்சி செய்யும் வரையில் தெற்காசிய பிராந்தியத்தில் தங்களால் ஆதிக்கம் செலுத்த முடியாது என்பதை அமெரிக்கர்கள் உணர்ந்திருந்ததால்தான் இந்த படுகொலை சம்பவம் நிகழ்ந்துள்ளதாக விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.
இலங்கை