தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் குழு டர்பன் பயணம்
கொழும்பு:
 
மிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற தூதுக்குழு தென்னாபிரிக்காவுக்கு பயணமாகியுள்ளது. நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் இக்குழு தென்னாபிரிக்காவின் தலைநகரான டர்பனுக்கு சென்றுள்ளது.

தென்னாபிரிக்காவில் ஆளும் கட்சியான தென்னாபிரிக்க காங்கிரஸின் 100 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கிடைத்த அழைப்பை ஏற்று இத் தூதுக்குழு அங்கு சென்றது.

இக்குழுவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.இவர்கள் வரும் 10ஆம் தேதி அளவில் நாடு திரும்புவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை