போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை: இலங்கைக்கு ஐ.நா. வலியுறுத்தல்
ஜெனீவா:
 
லங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கமிஷன் இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் தமீழழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். மனித உரிமைகள் அங்கு மீறப்பட்டதாகவும், இலங்கை அரசு போர்க்குற்றம் புரிந்ததாகவும் சர்வதேச அளவில் இலங்கைக்கு எதிராக கடும் கண்டனக் குரல் எழுந்தது.

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கமிஷன், போர்க் குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணையை இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. மனித உரிமைகள் அமைப்பில் சித்திரவதைக்கெதிரான பிரிவு இந்த கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

ஆனால் இலங்கை அரசு பல நாடுகளின் கோரிக்கையை தொடர்ந்து நிராகரித்து வருகிறது. கடந்த ஏப்ரலில் ஐக்கிய நாடுகள் சபை தனது அறிக்கையை வெளியிட்டது. அதில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாகச் சுட்டிக்காட்டியிருந்தது.
இது தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தப்பட்டு வருகிறது.
 
இலங்கை