விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு இல்லை: நெதர்லாந்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
நெதர்லாந்து :
 
மிழ்ழீழ விடுதலைக்காக போராடும் விடுதலை புலிகள் அமைப்பு தீவிரவாத அமைப்பு இல்லை என்று நெதர்லாந்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

விடுதலை  புலிகள் அமைப்புக்கு நன்கொடை வசூலித்ததாகவும் விடுதலை புலிகள் அமைப்பை தீவிரவாத அமைப்பாக அறிவிக்கவேண்டும் என்றும் தொடரப்பட்ட வழக்கில் நெதர்லாந்தின் ஹேக் நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.

ஐரோப்பிய கொள்கைகளின் அடிப்படையில் விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக கருத முடியாது. கடந்த 27 ஆண்டுகளாக அவர்கள் உள்நாட்டு போரில்தான் ஈடுபட்டு வந்தனரே தவிர, சர்வதேச ரீதியான போரில் ஈடுபட்டதில்லை.
 
இதன் மூலம் அவர்கள் மீது மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சுமத்தலாமே தவிர அவர்களை பயங்கரவாதிகள் என்று கருத முடியாது என்று நீதிபதி தீர்ப்பு கூறினார்.
 
இருப்பினும், விடுதலைப்புலிகளுக்கு பணம் திரட்டியதற்காக, குற்றம்  சாட்டப்பட்ட 5 தமிழர்களுக்கும் 2 முதல் 6 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 
இலங்கை