நாடுகடந்த தமிழீழ அரசுக்கு ஆதரவாக தஞ்சையில் நடைபெறவிருந்த மாநாடு ஒத்திவைப்பு
தஞ்சாவூர்:
 
மிழ் மாணவர்-இளைஞர் பேரவை சார்பில் நாடு கடந்த தமிழீழ அரசுக்கு ஆதரவாக தஞ்சையில் நடைபெற இருந்த மாநாடு - பேரணி அக்.24-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகி சா.அ.பாஸ்கரன் விடுத்துள்ள அறிக்கை: தமிழ் மாணவர்-இளைஞர் பேரவை சார்பில் செப்.30 அன்று தஞ்சையில் நடைபெற இருந்த நாடு கடந்த தமிழீழ அரசும் தமிழர்களின் கடமையும் என்பது குறித்த மாநாடு-பேரணி உள்ளாட்சித் தேர்தல் காரணமாக மாநாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க இயலாததால் அக்.24ம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது.
 
அன்று தஞ்சை மணிமண்டபத்திலிருந்து தொடங்கும் ஊர்வலம் மேரீஸ் கார்னர், கீழவாசல், அண்ணாசாலை வழியாக திலகர் திடலை சென்றடையும். அங்கு மாநாட்டு நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை