ஐ.நா. மனித உரிமை ஆணையாளருடன் சமரசிங்க குழுவினர் சந்திப்பு
கொழும்பு:
 
.நா.  மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக ஜெனிவா சென்றுள்ள மஹிந்த சமரசிங்க தலைமையிலான இலங்கைக் குழுவினர் செவ்வாய்க்கிழமையன்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.
 
இந்த சந்திப்பில் இலங்கை அமைச்சர்களான நிமல் ஸ்ரீபால் டி சில்வா மற்றும் அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 
இந்நிலையில் ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் தலைமையகத்திற்கு முன்னால் இலங்கைக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடைபெற்றது.

இலங்கை