குழந்தை திருமணங்களுக்கு அங்கீகாரம் அளிக்க ராஜபக்சே முடிவு
கொழும்பு:

திருமண வயதை 15 ஆக குறைப்பதற்கு இலங்கை அரசு ஆலோசனை செய்து வருகிறது. பொதுநிர்வாக உள்நாட்டு அமைச்சர் ஜோன் செனவிரட்ன இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
 
இலங்கையில் சிறுவர், சிறுமியர் மத்தியில் ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்களை கருத்திற்கொண்டே இந்த ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.
 
15 என்று திருமண வயதை குறைத்து குழந்தை திருமணங்களுக்கு அங்கீகாரம் அளிக்க ராஜபக்சே அரசு முடிவு செய்துள்ளது சர்வதேச அளவில் பெண்கள் மற்றும் மனித உரிமை அமைப்பினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் தற்போது திருமண வயது 18 ஆக உள்ளது.எனினும் இந்த வயதை 15 ஆக குறைப்பதற்கு பல்வேறு பெண்கள் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கை