இந்தி படங்களை நிராகரிக்கும் பத்மப்பிரியா


இயக்குனர் சேரனின் “தவமாய் தவமிருந்து” படத்தின் மூலம் அறிமுகமான நடிகை பத்மப்பிரியா சமீபத்தில் தனக்குவந்த ஐந்து இந்திப் படவாய்ப்புகளை நிராகரித்துள்ளார்.

கமர்ஷியல் ஹீரோயின்களுக்குள்ள முக்கியத்துவமும் அங்கீகாரமும் பெரிதாக உள்ளது என கூறியவர் இந்திப் பட வாய்ப்புகளை நிராகரித்தது குறித்து மேலும் அவர் கூறியவதாவது: “மன நிறைவுக்காக நிறைய படங்களில் நடித்துவிட்டேன். அதற்காக பல விருதுகளும் வாங்கிவிட்டேன். ஆனால் கமர்ஷியல் ஹீரோயின்களுக்குள்ள முக்கியத்துவமும் அங்கீகாரமும் தனியாக உள்ளது. அதனால் இனி சில வருடங்களுக்கு கமர்ஷியல் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்திருக்கிறேன். இந்தியில் கதையம்சமுள்ள படத்தில் நடித்தேன். இதனால் அங்கு நல்ல பெயர் கிடைத்தது. அதற்கு பிறகு வந்த படங்களும் அதேபோன்று வந்தது. ஐந்து படங்கள் வரை நிராகரித்துவிட்டேன். கிளாமராக நடிக்கத் தயாராக இருக்கிறேன். கமர்ஷியல் ஹீரோயினாக அங்கீகாரம் கிடைத்த பிறகு எந்த படத்தில் நடித்தாலும் அதற்கான வியாபார வளையம் பெரிதாக இருக்கும். அதன் பிறகு வித்தியாசமான முயற்சிகள் எடுத்தால் அதற்கு அங்கீகாரம் கிடைக்கும்” என்றார் பத்மப்பிரியா.

பத்மபிரியா தற்பிபொழுது தமிழில் “கோகுலம்” என்ற படத்தில் நடித்துவருகிறார்.
சினிமா