வருகிறது பில்லா- 2
 

ரஜினியின் பழைய “பில்லா”வை அஜித் இருவேடங்களில் நடிக்க ரிமேக் செய்தார் இயக்குனர் விஷ்ணுவர்தன். இப்படத்தின் இரண்டாம் பாகத்தை அஜித் நடிக்க, விஷ்ணுவர்தன் இயக்க ஐங்கரன் நிறுவனம் தயாரிக்கிறது என்ற செய்தி வெளியாகியுள்ளது.


இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், ஸ்ரீபிரியா, மேஜர் சுந்தரராஜன் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற படமான “பில்லா” மூன்று வருடங்களுக்கு முன் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித், பிரபு, நயன்தாரா, நமீதா நடிக்க மீண்டும் வெற்றியைத் தேடித்தந்தது ரீமேக் “பில்லா”. படத்தை தயாரித்தது ஐங்கரன் நிறுவனம்.

ஒரு படத்தை ரீமேக் செய்வது வழக்கமான ஒன்று என்றாலும் ரீமேக் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்குவது புதுமுயற்சியே. இந்த புதுமுயற்சிக்கு சொந்தகாரர் ரீமேக் “பில்லா”வின் இயக்குனர் விஷ்ணுவர்தன் தான். இரண்டாம் பாகத்திற்கான திரைக்கதை முழுவதையும் எழுதிமுடித்துவிட்டாராம் விஷ்ணுவர்த்தன்.

ஆகவே மீண்டும் விஷ்ணுவர்த்தன் - அஜித் கூட்டணியில் ஐங்கரன் தயாரிக்கும் படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் தொடங்கப்படுமாம்.

மை நேம் ஸ் பில்லா 2.



 
சினிமா