தமிழர்களுக்கு புலிகள் நிதியில் நிவாரணம்: இலங்கை திட்டம்


கொழும்பு:
 

``மிழர்களுக்கு நிவாரணம் வழங்க விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட நிதியை பயன்படுத்துவதில் தவறில்லை" என்று  இலங்கை செய்தித்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 

செய்தியாளர்களிடம் அவர் இது குறித்து மேலும் கூறியது, ``இலங்கைக்கு எதிரான வகையில் இல்லாமல்,  இறையாண்மைக்கு பங்கம் ஏற்படாத வகையில்,  சட்டத்திற்கு உட்பட்டு தமிழர்களுக்கு உதவி செய்ய விடுதலைப் புலிகளிடமிருந்து அரசு கைப்பற்றிய நிதியை பயன்படுத்துவதில் தவறில்லை.

தமிழர் நலனுக்காக வடக்குப் பகுதி அபிவிருத்திக்கு இந்த நிதியை பயன்படுத்தலாம்.   அரசுக்கு ஆதரவு சாட்சியாக மாறிய குற்றவாளிகளை மன்னிக்கச் சட்டத்தில் இடம் உள்ளது.  குமரன் பத்மநாபன் இதற்கு விதிவிலக்கல்ல" என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.  
இலங்கை