சிவந்தி ஆதித்தனார் மகள் மறைவுக்கு கருணாநிதி இரங்கல்

சென்னை:


தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தனார் மகள் மறைவுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.  

இது குறித்து முதல்வர் கருணாநிதி சிவந்தி ஆதித்தனாருக்கு அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில், ``சிவந்தி ஆதித்தன் மகள் மாலா ஜெயராமையா வெளிநாடு சென்ற இடத்தில் இயற்கை எய்திய செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறேன்.

இந்த இழப்பு தினத்தந்தி நாளிதழ், மற்றும்   நண்பர் சிவந்தி ஆதித்தன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும்  ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

இந்நிலையில் மிகுந்த துன்பமும், துயரமும் அடைந்துள்ள நண்பர் சிவந்தி ஆதித்தன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று முதல்வர் கருணாநிதி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு