மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்


சென்னை:




லங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். செவ்வாய்க்கிழமை இராமேஸ்வரத்திலிருந்து மீனவர்கள் 200 பேர் கடலுக்கு சென்றனர்.

இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக்கொண்டிருந்த அவர்களை அத்துமீறி அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் படகுகளை சுற்றிவளைத்தனர். மீனவர்கள் படகுகளில் நுழைந்து, கம்பு, நைலான் கயிறு ஆகியவற்றைகொண்டு தாக்கினர்.  பின்னர் அங்கிருந்து மீனவர்களை அடித்து விரட்டியுள்ளனர்.

அச்சத்துடன் அங்கிருந்து திரும்பிக்கொண்டிருந்த மீனவர்களை இந்திய எல்லைக்குள் அத்துமீறி வந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த சிங்கள மீனவர்கள் தமிழக மீனவர்களை சுற்றிவளைத்துள்ளனர். படகுகளில் இறங்கி தமிழக மீனவர்களை அறிவாள்கொண்டு வெட்டியுள்ளனர்.

இதில் பத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் சிங்கள மீனவர்கள் பிடுங்கிக்கொண்டு தப்பிவிட்டனர்.  இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தமிழக மீனவர்களை தாக்குதல் நடத்திவரும் நிலையில் தற்போது சிங்கள மீனவர்களும் தமிழக மீனவர்களை தாக்கத் தொடங்கியுள்ளது. இராமேஸ்வரம் மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இராமேஸ்வரத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்ததாக 15 சிங்கள மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்  என்று கடலோரக் காவல்படையினர் அறிவித்துள்ளனர்.
இலங்கை