பாக். விமான விபத்து: 114 பேர் பலி, 45 பேர் உயிர்த் தப்பினர்


இஸ்லாமாபாத்:



ஸ்லாமாபாத் அருகில் ஏற்பட்ட பயங்கர விமான விபத்தில், விமானத்தில் இருந்த 159 பேரில் 114 பேர் பலியாயினர். 45 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

பாகிஸ்தானின் முக்கிய நகரான இஸ்லாமாபாத்துக்கு துருக்கியிலிருந்து ஏர்புளு என்ற தனியார் பயணிகள் விமானம் வந்துகொண்டிருந்தது.  இஸ்லாமாபாத் அருகில் வந்து கொண்டிருந்தபோது மார்காலா மலைப்பகுதிக்கு மேல் பறந்துகொண்டிருந்த போது திடீரென தீ பற்றி வெடித்தது. 

மார்காலா மலைப்பகுதியில் இருந்த காட்டில் விமானம் விழுந்து நெருங்கியது.  தகவல் அறிந்த விமான அதிகாரிகள் உடனே மீட்புப் படையை அனுப்பினர்.  ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 

முதலில் விமானத்தில் பயணம் செய்த 159 பேரும் பலியாயிருப்பார்கள் என்று அஞ்சப்பட்டது.   மீட்புப்பணியின் போது பலர் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பது தெரியவந்ததால் பலரையும் உயிருடன் மீட்க மீட்புப் படையினர் போராடினர். இதில் 45 பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

உயிரிழந்த 114 பேரின் உடல்கள் சேதம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டன.  இந்த சம்பவம் பாகிஸ்தான் பயணிகள் விமான சேவை நிறுவனங்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியா