தலைமைத் தேர்தல் ஆணையராக குரேஷிக்கு பதவி உயர்வு



டெல்லி:
 
 
தேர்தல் ஆணையர்களில் ஒருவராக இருந்த குரேஷி தலைமைத் தேர்தல் ஆணையராக பதிவு உயர்வு பெற்றார்.
 
1971-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாகத் தேர்வு பெற்ற குரேஷி மத்திய மாநில அரசுகளின் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.   2006-ல் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
 
இந்நிலையில் தற்போது தலைமைத் தேர்தல் ஆணையராக உள்ள நவீன் சாவ்லா வரும் ஜூலை-29ஆம் தேதி  ஓய்வு பெறுகிறார்.  இந்நிலையில் தேர்தல் ஆணையராக இருந்த குரேஷி தலைமைத் தேர்தல் ஆணையராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
 
இதற்கான உத்தரவை முறைப்படி குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீல் பிறப்பித்தார்.   இவர் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இப்பதவி வகிப்பார்.
இந்தியா