விலைவாசி உயர்வு ஒரு பிரச்சனையில்லை: பிரணாப் முகர்ஜி


டெல்லி:


``த்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு ஒரு பிரச்சனையே இல்லை"என்று மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

இன்று மக்களவையில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய ஒத்திவைப்புக் கோரிக்கைக்கு பதில் அளித்து பேசிய அவர் மேலும் கூறியது.....``அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு குறிப்பிட்ட அளவுக்கு இல்லை. அது ஒரு பிரச்சனையில்லை.

எனினும் இது குறித்து எதிர்க்கட்சிகள் தகுந்த ஆலோசனைகளை வழங்கினால் ஏற்றுக்கொள்வோம்.    இந்த பிரச்சனையை மையமாக வைத்து ஒத்திவைப்பு தீர்மானம்,  வாக்கொடுப்பு நடத்துவது என்ற பேச்சுக்கே இடம் இல்லை" என்று பிரணாப் முகர்ஜி பதில் அளித்தார்.
இந்தியா