தமிழர் பகுதிகளுக்கு முழு சுயாட்சி வழங்க இந்தியா வலியுறுத்த வேண்டும்: யெச்சூரி

டெல்லி:



``லங்கையில் அந்நாட்டு அரசியலமைப்புக்கு கட்டுப்பட்டு தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு முழு சுயாட்சி அதிகாரம் வழங்க இலங்கையை இந்தியா வலியுறுத்த வேண்டும்" என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியது, `` இலங்கை அரசு தமிழர்களுக்கு செய்து வரும் மறுவாழ்வுப் பணிகள், இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்களின் நிலையை பார்வையிடுவதற்காக அனைத்து கட்சித் தலைவர்கள் அடங்கிய குழு ஒன்றை இலங்கைக்கு அனுப்ப வேண்டும். 

இந்திய அரசு அளித்த நிதியை தமிழர்களின் மறுவாழ்வுக்கு முழுமையாக பயன்படுத்தவும், தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ, இலங்கை அரசமைப்புக்குக் கட்டுப்பட்டு தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு முழு சுயாட்சி அதிகாரம் அளிக்கவும் இலங்கையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும், இலங்கை அதை ஏற்று செயல்பட வேண்டும்" என்று சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.
இலங்கை