இந்தியாவின் மாநில அரசுகளின் தீர்மானம் பற்றி கவலையில்லை:இலங்கை அரசு
கொழும்பு:
 
லங்கை அரசு குறித்து இந்தியாவின் மாநில அரசுகளின் தீர்மானம்பற்றி கவலையில்லை. விவகாரங்களை இந்திய மத்திய அரசுடன் மட்டும்தான் இலங்கை கையாளுமே தவிர மாநில அரசுடன் கையாளாது என்று இலங்கை அமைச்சர் கெகலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
 
கொழும்பில் நடந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிப்பதற்கான செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.
 
இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடையை இந்தியா கொண்டுவரவேண்டும் என்று இந்திய மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் ஒன்றை தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றியது தொடர்பாக இலங்கையின் கருத்து என்ன என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் கெகலிய இவ்வாறு கூறியுள்ளார்.
 
``இந்தியாவும் இலங்கையும் வெவ்வேறான அரசியல் நிகழ்ச்சித் திட்டங்களை கொண்டிருக்கும் வேளையில், இவற்றினால் ஏற்படக்கூடிய முரண்பாடுகளை இந்திய மத்திய அரசாங்கத்துடன்தான் கையாளுவோமே தவிர மாநில அரசுகளுடன் அல்ல.
 
இலங்கை அரசு குறித்து இந்தியாவின் மாநில அரசுகளின் தீர்மானம் பற்றி கவலையில்லை`` என்று கெகலிய கூறியுள்ளார்.
இலங்கை