இலங்கையில் சீன ராணுவ தளம் : வைகோ எச்சரிக்கை

சென்னை:




``லங்கையில் சீன ராணுவத்தினர் தளம் அமைத்திருப்பதால் தென்னகத்துக்கு குறிப்பாகத் தமிழகத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது" என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,  மருத்துவருமான  ஏ.என்.கலாநிதி எழுதிய `சீனப் பெருஞ்சுவர்" புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.  இதில் பங்கேற்று புத்தகத்தின் முதல் படியை வெளியிட்டு பேசிய வைகோ, ``இலங்கையில் தமிழர்களை அழிக்க ராஜபட்சே அரசுக்கு சீனா ஆயுத உதவி செய்ததன் மூலம் இப்பகுதியில் காலூன்ற முயற்சிக்கிறது.

இதனால், தமிழகம் உள்பட தென்னகத்துக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுவரைத் தாக்குதலுக்கு ஆளாகாதத் தமிழகமும் வருங்காலத்தில் தாக்கப்படும் அபாயம் உள்ளதாகக் கருதப்படுகிறது.

தென்னகத்தில் தான் கூடங்குளம், கல்பாக்கம் அணு உலைகளும், ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளமும், தும்பா உள்ளிட்ட விண்வெளி ஆய்வு மையங்களும், விஜய நாராயணம், ஆவடி உள்ளிட்ட பாதுகாப்பு கேந்திரங்களும் உள்ளன. இதனால், தமிழகம் உள்பட தென்னகத்துக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது.

சீனத்தை பகை நாடாக இந்தியா கருதியதே இல்லை. அந்த நாட்டுடன் நட்புறவு பாராட்டவே, நேரு விரும்பினார். ஆனால், சீனாதான் நம் மீது படையெடுத்து இந்திய மக்களின் மனங்களைத் தவிக்க வைத்தது. அப்போது சிறையில் இருந்த அண்ணா, நேருவின் வேண்டுகோளை ஏற்று பிரிவினைக் கோரிக்கையை கைவிட்டார். சோனியா காந்திக்கு சீன பிரச்னைக் குறித்து சரியான அணுகுமுறை இல்லை"  இவ்வாறு வைகோ பேசினார்.
இலங்கை