அரசு திட்டங்கள் ஈழத்தமிழ் அகதிகளுக்கும் கிடைக்கும்: தமிழக அரசு

சென்னை:
 
மிழக அரசின் நலத் திட்டங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து அகதிகள் முகாம்களில் உள்ள தமிழர்களுக்கும் கிடைக்கும் என்று தமிழக அரசு  தெரிவித்துள்ளது.
 
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
 
ஆளுநர் உரையில் இது குறித்து மேலும் கூறியது, ``தமிழக அரசின் நலத்திட்டங்கள் ஈழத் தமிழர்களுக்கும் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் உள்ள அனைத்து முகாம்களிலும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்.
 
வீடுகள், குடிநீர், மின்சாரம், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படும். இதில் இந்த அரசு தனி கவனம் செலுத்தும்.  அரசின் திட்டகள் அனைத்தும் முகாம் தமிழர்களுக்கும் பயன் தரும் வகையில் செயல்படுத்தப்படும்" என்று ஆளுநர் உரையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இலங்கை