தமிழர்கள் உலகம் முழுவதும் இருந்தும் கையளவு நிலம்கூட தமிழனுக்கு இல்லை:இரா. இளங்குமரனார்
திருச்சி:
 
``லக மொழியாக தமிழ் இருந்தும், உலகம் முழுவதும் தமிழர்கள் இருந்தும் சொந்தமாக கையளவு நிலம்கூட தமிழனுக்கு இல்லை``என்றார் முனைவர் இரா. இளங்குமரனார்.

திருச்சியில் பாவலர் முவ. பரணர் எழுதிய "ஆண்டகை` பாட்டிலக்கிய நூல் வெளியீட்டு விழாவில் முனைவர் இரா. இளங்குமரனார் பேசியது,   "பழங்காலத்தில் நடைபெற்ற அறப்போரா இலங்கையில் நடைபெற்றது? இல்லை. எந்த அறமும் அங்கே கடைப்பிடிக்கப்படவில்லை.  
 
சிறார்களை படையில் பயன்படுத்தினார்கள், மக்களை அரணாகப் பயன்படுத்தினார்கள் என்று குற்றம் சாட்டப்படுகிறது. வீடுகளில் சமைக்கும்போது குழந்தைகளும் பணியாற்றுவதில்லையா? அதைப் போலத்தான் இதுவும்.  உலக மொழியாக தமிழ் இருந்தும், உலகம் முழுவதும் தமிழர்கள் இருந்தும் சொந்தமாக கையளவு நிலம்கூட தமிழனுக்கு இல்லை. ஆளில் மட்டுமல்ல தீண்டாமை, மொழியிலும்தான் தீண்டாமை இருக்கிறது.
 
ராஜராஜ சோழனின் உத்தரவில் கோயில்களில் 48 ஓதுவார்கள், இரு இசைக் கலைஞர்கள், ஒரு அர்ச்சகர் இருந்தார். இப்போது ஓதுவார்களே இல்லை. அர்ச்சகர்கள் மிகுந்திருக்கிறார்கள். ஏன் இப்படி நடந்தது? எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கும் நெட்டை மரமாக இருந்துவிடாமல், களப்பணியாற்றுவதுதான் தீர்வைத் தமிழ் இன உணர்வை, மொழி வளர்ச்சியைத் தரும்`` என்றார் முனைவர் இரா.இளங்குமரனார்.
இலங்கை