ஈழத் தமிழர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தருவது தமிழர்கள் கடமை: பழ. நெடுமாறன்

சென்னை:

``ழத்தமிழர்களின் வாழ்வுரிமை, நில உரிமைகளை பெற்றுத்தருவது தமிழகத் தமிழர்களின் கடமை"என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறினார்.

இலங்கையின் முள்ளிவாய்க்கால் பகுதியில் பல ஆயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதன் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் சென்னை, புரசைவாக்கம் தாணா தெருவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடந்த அந்தக் கூட்டத்தில் பழ. நெடுமாறன் பேசியது...``இலங்கையில் எஞ்சியிருக்கும் தமிழர்களைப் பாதுகாப்பதே நமது முதல் பணியாக உள்ளது. வீடு இழந்து, உடைமைகளை இழந்து நிற்கும் அந்த மக்களுக்கான உரிமைகள் கிடைத்திட வேண்டும்.

அந்த மக்களுக்கு ஆதரவாக சர்வதேச சமுதாயத்தின் குரலை வலுப்படுத்த வேண்டும். இதற்கான கடமையும், பொறுப்பும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர்களாகிய நம்மிடம்தான் உள்ளது`` என்றார் பழ. நெடுமாறன்.
இலங்கை