ஈழத் தமிழர்களுக்கு கருணாநிதியால் நன்மையில்லை: கிருஷ்ணசாமி

நெல்லை:




``ழத் தமிழர்களுக்கு மத்திய, மாநில அரசுகளினால் எந்த நன்மையும் இல்லை. இந்த விஷயத்தில் கருணாநிதி மக்களை ஏமாற்றிவருகிறார்" என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். 

குறித்து அவர் நெல்லையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது, ``தமிழர்கள் வாழும் பகுதிகளில் ஆயிரக்கணக்கான சிங்களர்களை குடியேற்றம் செய்யும் இலங்கை அரசின் நடவடிக்கையை அந்நாட்டு எம்.பி.க்கள் வெட்டவெளிச்சமாக்கி உள்ளனர்.

இலங்கைத் தமிழர் பிரச்னையில் தமிழக முதல்வர் கருணாநிதி மக்களை ஏமாற்றி வருகிறார். ஏற்கெனவே இலங்கைக்குச் சென்று வந்த நாடாளுமன்றக் குழுவினர் எதையும் சாதிக்காத நிலையில் இப்போது மீண்டும் ஒரு தூதுக்குழுவை நியமிக்க வேண்டும் என்பது ஏமாற்று வேலை.

இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் எவ்வித நன்மையும் செய்யவில்லை. எனவே, இப்போது இலங்கை அரசு மீது ஐ.நா. விசாரணை நடத்த இந்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும். அதற்கான ஒரு கடமையாவது தமிழக முதல்வர் செய்ய வேண்டும்" என்று கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
இலங்கை