தலையிடாதே: அமெரிக்கா, ஐ.நா.வை எச்சரிக்கிறது இலங்கை


கொழும்பு:


``மிழர் பிரச்சனையில் எங்களை குறை கூறுவதிலேயே அமெரிக்காவும், ஐ.நா. வும் கவனம் செலுத்துகின்றன. இலங்கை பாராளுமன்றம் செய்யவேண்டியதை அவர்கள் சொல்லவேண்டியதில்லை" என்று அமெரிக்கா அரசையும், ஐ.நா.சபையையும் இலங்கை கடுமையாக சாடியுள்ளது.

கொழும்புவில் செய்தியாளர்களை சந்தித்த இலங்கை செய்தித் தொடர்புத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மேலும் கூறியது, ``இறையாண்மை உள்ள நாட்டின் உள்விவகாரங்களில் அமெரிக்காவும், ஐ.நா.சபையும் தலையிடுவதை ஏற்க முடியாது.

பாராளுமன்றத்தில் செய்ய வேண்டிய பணிகளை அவர்கள் செய்ய முற்படுகின்றனர். 17 ஆவது அரசியலமைப்பு விவகாரம் எமது உள்விவகாரமாகும்.  இலங்கையில் ஜனநாயகம் மேம்படுத்தப்பட வேண்டுமென வெளிவிவகார அமைச்சர் ரொபேர்ட் பிளேக் தெரிவித்திருக்கிறார்.

இறைமையுள்ள நாட்டின் மீது சர்வதேச அழுத்தம்  கொடுக்கும் முயற்சியாகவே இதனை நாம் பார்க்கின்றோம்" என்று கெஹலிய ரம்புக்வெல் தெரிவித்துள்ளார்.
இலங்கை