கொடிகாமம் முகாமில் உணவின்றி அவதியுறும் தமிழர்கள்

கொடிகாமம்:

 
லங்கை ராணுவ முள்வேலி முகாமிலிருந்து வெளியேற்றப்பட்டத் தமிழர்கள் கொடிகாமம் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கிய நிவாரணத்தை இலங்கை அரசு திடீரென நிறுத்திவிட்டது. மேலும் அம்மக்களுக்கு  மட்டமான அரிசையை விநியோகித்து வருகிறது.   உண்பதற்கு தகுதியற்ற உணவை வாங்க மனமில்லாமல் முகாமில் உள்ள தமிழர்கள் பல்லாயிரக்கணக்கானோர் பட்டினிகிடந்து வருகின்றனர்.

குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் என ஆயிரக்கணக்கானோர் உணவின்றி அவதிப்படுகின்றனர். இந்நிலை தொடர்ந்தால் பலரும் உணவின்றி பலியாக வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

சர்வதேச மனித உரிமை அமைப்புகள், சேவை நிறுவனங்கள் உடனடியாக இதில் கவனம் செலுத்தி தமிழர்களுக்கு உண்ணத் தகுதியான உணவு வழங்கி உயிர் காக்க வேண்டும் என்று முகாம் தமிழர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இலங்கை