இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை கோரி நாடு கடந்த தமிழ் ஈழ அரசு கையெழுத்து இயக்கம்
கொழும்பு:
லங்கையில் நடத்தப்பட்ட படுகொலைகள், போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா. சபை அறிக்கையின் அடிப்படையில், இலங்கை மீது சர்வதேச நீதிமன்றத்தில் போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, நாடு கடந்த தமிழ் ஈழ அரசு கையெழுத்து பிரசார இயக்கம் மேற்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
உலகெங்கும்  உள்ள தமிழர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், பொது மக்களிடம் கையெழுத்துகள் பெறப்பட்டு, ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூனிடம் சமர்ப்பிக்கப்படும் என்று நாடு கடந்த தமிழ் ஈழ அரசு கூறியிருப்பதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
 
மேலும், இலங்கையில் நடத்தப்பட்ட படுகொலைகள், போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா. சபை அறிக்கைக்கு எதிரான இலங்கை அரசின் முயற்சிகளை முறியடிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் இடம்பெற்றுள்ளவர்கள் பல்வேறு நாடுகளின் அரசு தரப்பினரை சந்தித்து விளக்கம் அளிப்பார்கள் என்றும் இலங்கைத் தமிழ் இணையதளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை