நளினி கோரியதாலேயே புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்: சிறைத்துறைத் தலைவர்
 

திருநெல்வேலி: 
 
 
 
``வேலூர் சிறையில் இருந்த நளினி,  சிறைத் துறைக்கு அனுப்பியக் கடித்தில் கோரியதின் பேரிலேயே அவர் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்" என்று சிறைத்துறைத் தலைவர் ஷியாம் சுந்தர் தெரிவித்தார்.
 
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் சிறையில் இருந்த நளினி திடீரென புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
 
இது குறித்து சிறைத்துறைத் தலைவர் ஷியாம் சுந்தரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் மேலும் கூறியது, ``ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி வேலூர் சிறையில்  இருந்து சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
 
அவர் கேட்டுக் கொண்டதற்கு  இணங்க எடுக்கப்பட்ட நடவடிக்கையே தவிர,  நிர்வாக வசதிக்கு அல்ல.    தன் தாய், சகோதரர்கள் சென்னையில் இருப்பதால் வேலூருக்கு வந்து தன்னை  பார்த்துச் செல்வதில் உள்ள கஷ்டங்களை அவர் மனுவில் தெரிவித்து இருந்தார். அரசு  அதை பரிசீலனை செய்து இந்த முடிவு எடுத்துள்ளது"என்று ஷியாம் சுந்தர் தெரிவித்தார்.
இலங்கை