தமிழர்களுக்கு உரிமை: இலங்கை அரசுக்கு எஸ்.எம்.கிருஷ்ணா அறிவுறுத்தல்
 

டெல்லி:

``னப்பிச்னைக்குத் தீர்வு ஏற்பட தமிழர்களுக்கு உரிமை வழங்க வேண்டும்.  இலங்கை அரசு அதற்கான உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்" என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.

மக்களவையில் இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா பேசியது, ``இலங்கையில் போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. அங்கு தமிழர் பிரச்னை, 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது.

தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு இருந்து வந்ததே பல பிரச்னைகளுக்கும் காரணம். இப்போது போர் முடிந்துவிட்ட சூழ்நிலையில், அங்கு தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்; அவர்களுக்கு உரிய மரியாதையும் கண்ணியமும் காக்கப்பட வேண்டும். இதற்காக அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவுடன் பலமுறை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி பேசிவருகிறது.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புனர்வாழ்வு அளிக்க வேண்டும். அதற்குரிய நிவாரணப் பணிகளையும், நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த வேண்டும். தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை அந்நாட்டு அரசாங்கம் உணர்ந்து, அதற்கேற்ப வகையில் அவற்றை நிறைவேற்றிட வேண்டும்`` என்றார் எஸ்.எம்.கிருஷ்ணா. 
இலங்கை