ராஜபக்சேவை தூக்கிலிட வேண்டும்: வைகோ ஆவேசம்
 

சென்னை:
 
"லங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேசக் குற்றவாளி கூண்டில் நிறுத்தி தூக்கிலிட வேண்டும்" என்று  ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
 
இலங்கையில் பிரபாகரன் தாயார் மறைந்த பார்வதியம்மாள் சிதையை இழிவுபடுத்திய இலங்கை அரசைக் கண்டித்து சென்னையில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் ஆகியோர் உள்ளிட்ட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
 
இலங்கை யாழ்ப்பாணம் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் தாயார் பார்வதியம்மாள் சிகிச்சை பலன் இன்றி காலமானார்.  அவரின் எரியூட்டப்பட்ட இடத்தில் இலங்கை ராணுவம் நாய்களை கொன்று புதைத்து இழிவுபடுத்தியது.
 
இதற்கு இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.  பார்வதியம்மாள் சிதையை இழிவுபடுத்திய இலங்கை தூதரகத்தைத் தமிழகத்திலிருந்து அகற்றவேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று மயிலாப்பூர் பகுதியில் கூடிய இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்பினர் பழ.நெடுமாறன், வைகோ, தா.பாண்டியன் தலைமையில் இலங்கை அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
 
இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்துக்குபின் இலங்கை தூதரகத்தை  முற்றுகையிட ஊர்வலமாக சென்ற பழ.நெடுமாறன், வைகோ, தா.பாண்டியன் உள்ளிட்ட 500 பேரையும் சென்னை மாநகர போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டத்தி
ல் பங்கேற்ற ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ அங்கு கூடியிருந்த செய்தியாளர்களிடம்  கூறியது, ``பார்வதியம்மாள் சிதையை இழிவுபடுத்திய பாதகர்கள் ஆட்சி செய்யும் இலங்கை அரசின் தூதரகம் இந்தியாவில் இருக்கக்கூடாது.
 
இல்லையேல் எகிப்து, லிபியா, மேற்குலக நாடுகளில் ஏற்பட்ட நிலை இங்கு வரும் வேறு வகையில் இலங்கை தூதரகம் அகற்றப்படும்.
 
இலங்கையில் தமிழினத்தை கொன்றழித்த இலங்கை அதிபர் படுபாதகன் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவித்து சர்வதேச குற்றவாளி கூண்டில் நிறுத்தித் தூக்கிலிட வேண்டும்"  என்று வைகோ தெரிவித்தார். 
இலங்கை