இலங்கை தமிழர்களுக்கு உதவி நிதி திரட்டப்படும்: ஆர்.எஸ்.எஸ்.
 
 
புதுக்கோட்டை:
 
லங்கையில் வாடும் தமிழர்களுக்கு அடிப்படை உதவிகளைச் செய்வதற்காக நிதி திரட்டப்படவுள்ளதாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தென் தமிழக அமைப்பாளர் கேசவ விநாயகம் தெரிவித்தார்.  
 
இது குறித்து புதுக்கோட்டையில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது...``ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மூன்று முக்கிய பிரச்னைகளை முன்னிறுத்தி நாடு தழுவிய பிரசார இயக்கத்தை கடந்த 6 -ம் தேதி தொடங்யுள்ளது.    முதலாவதாக, இந்துக்களைத் தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புப் படுத்தி உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், ராகுல்காந்தி பேசி வருவது கண்டனத்துக்கு உரியது. இது இந்துக்களை அவமதிப்பதாகும்.     இரண்டாவதாக காஷ்மீர் குறித்த சரியான கண்ணோட்டத்தை அரசு கொடுக்கவில்லை. அந்தப் பகுதி நம் நாட்டுக்கு சொந்தமில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு  தேசியக்கொடியை ஏற்ற முடியவில்லை. இது நாட்டுக்கு ஏற்பட்ட அவமானம்.   
 
மூன்றாவதாக, ராமஜென்ம பூமி விவகாரத்தில் தொல்லியல் துறை ஆராய்ச்சிக்கு பிறகே அங்கு பிரம்மாண்டமான கோயில் இருந்த உண்மை தெரியவந்தது.   இதன் அடிப்படையில், நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மத்திய அரசு கையகப்படுத்திய 67 ஏக்கர் நிலத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும்.   
 
இதுவரை சுமார் 3 லட்சம் வீடுகளை பிரசாரம் மூலம் சந்தித்துள்ளோம்.    மொத்த மக்கள் தொகையில் 10 சதத்தினரையாவது நேரில் சந்திப்பதே எங்கள் நோக்கம். இலங்கையில் வாடும் இந்து தமிழ் மக்களுக்கு அங்கு இயங்கி வரும் எங்கள் சர்வதேச சேவை அமைப்பு உதவிகளைச் செய்து வருகிறது.    மேலும், அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் வகையில், மார்ச் மாதம் நிதி திரட்ட உள்ளோம்`` என்றார் கேசவ விநாயகம்.
இலங்கை