விடுதலைப்புலிகளிடம் 13 கப்பல்கள் : இலங்கை அமைச்சர் தகவல்
 
 
கொழும்பு:
 
விடுதலைப் புலிகளின் 13 கப்பல்கள் சர்வதேச கடல்பரப்பில் செயல்பட்டுக் கொண்டிருருப்பது தொடர்பான தகவல்கள் அரசுக்கு கிடைத்துள்ளதாக இலங்கை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
 
இது குறித்து இலங்கைத் தமிழ் இணையதளங்கள் வெளியிட்டுள்ள அவர் கூறியதாக வெளிவந்துள்ள செய்தியில்...`விடுதலைப் புலிகளின் 13 கப்பல்களும் பல்வேறு நாட்டவர்களின் பெயர்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது குறித்து புலனாய்வின்போது தெரியவந்தது.
 
அந்தக் கப்பல்கள் இன்னும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கின்றன. மேலும் கப்பல் போக்குவரத்து மூலம் பெரும் நிதியை விடுதலைப் புலிகள் அமைப்பு ஈட்டி வருகிறது.
 
அந்தக் கப்பல்களைக் கைப்பற்றி இலங்கை அரசுக்கு சொந்தமாக்கிக் கொள்வது தொடர்பாக சர்வதேச அளவில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருகின்றன`  என அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்ததாக இலங்கைத் தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கை