Sorry, you need to activate JavaScript in your browser.
ஆனால் அதை இலங்கை அமைச்சர் பெரீஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பெரீஸ்....``தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட நிகழ்வில் இலங்கை கடற்படைக்கு தொடர்பு இல்லை. செயற்கைக்கோள் புகைப்படங்களைப் பார்க்கும்போது, இலங்கை கடற்படையினரை எந்த வகையிலும் குறைகூற முடியாது. ஆனால், ஏதேனும் ஆதாரங்களை அளித்தால் அதுகுறித்து பரிசீலிக்க தயாராக உள்ளோம். மீனவர் பிரச்சனைகள் குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள கூட்டு நடவடிக்கை குழு விரைவில் கூடி இதற்கு நிரந்தர தீர்வு காண்பது குறித்து ஆலோசிக்கும்`` என்று ஜி.எல்.பெரீஸ் கூறினார்.