அ.தி.மு.க. ஆட்சி வந்தாலே ராஜபட்சே ராணுவம் பயப்படும்: தா.பா
 
 
சேலம்:
 
``மிழ்நாட்டில் அ.தி.மு.க. அட்சியை பிடித்தாலே இலங்கை அதிபர் ராஜபக்சேவின் ராணுவப்படை பயப்படும். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் நடைபெறாது`` என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்தார்.
 
சேலம் வந்த அவர் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறியது...`` தமிழக  மீனவர் படுகொலையைத் தடுக்க வேண்டுமென்றால் கச்சத்தீவை மீட்க வேண்டும்.
அது ஒன்றுதான் தீர்வாக அமையும்.
 
தமிழ்நாட்டில் அ.தி.மு.க.  ஆட்சிக்கு வந்தால் இப் பிரச்னைக்குத் தீர்வு காணப்படும். அ.தி.மு.க. தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தாலே ராஜபட்சே ராணுவம் பயப்படும். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் நடைபெறாது`` என்றார் தா.பாண்டியன்.
 
இலங்கை