பூந்தமல்லி முகாமில் ஈழத்தமிழர்கள் உண்ணாவிரதப் போராட்டம்
 
 
பூந்தமல்லி:
 
ல ஆண்டுகளாக சிறப்பு முகாம் என்ற பெயரில்  உள்ள சிறையில் விசாரணை ஏதும் இன்றி அகதிகளாக சிறப்பு முகாமில் அடைத்து வைத்திருக்கும் எங்களை விரைவில் விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பூந்தமல்லி முகாமில் அகதிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
 
பூந்தமல்லியை அடுத்த கரையாஞ்சாவடியில் அகதிகள் சிறப்பு முகாம் உள்ளது. இங்கு கடந்த பல ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் இருந்து போதிய ஆவணங்கள் இல்லாமல் வந்த கங்காதரன், அமலன், ராஜா, செல்வகுமார், ஜெயமோகன், சந்திரகுமார், பகீரதன், பத்மராஜா, பரமேஸ்வரன் ஆகிய 9 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 
செவ்வாய்கிழமை காலை முகாமில் இருந்த 2 பேர் வழக்கு விசாரணைக்காக புதுக்கோட்டை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மீதமுள்ள 7 பேர் காலை முதல் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.அவர்களை விரைவில் விடுவித்து திறந்தவெளி முகாமில் குடும்பத்தாருடன் தங்க வைக்க வேண்டும்.
 
சிறப்பு முகாமில் வழக்கறிஞர்கள் உள்பட யாரையும் எளிதில் பார்க்க முடியாமல் ஜெயில் கைதி போன்று அடைத்து வைத்தல், மற்ற முகாம்களில் ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு செலவீனமாக ரூபாய் 65 வழங்கப்படுகிறது. ஆனால் இங்கு ரூபாய் 45 மட்டுமே வழங்கப்படுகிறது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
 
இதையடுத்து பூந்தமல்லி தாசில்தார் பத்மஜா, ஆர்ஐ ஜெயக்குமார் ஆகியோர் காலையில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து தாசில்தார் பத்மஜாவிடம் கேட்டபோது...``அவர்களை விடுதலை செய்வது குறித்து நான் எதுவும் கூற முடியாது. ஆனால் பிப்ரவரி 1-ம் தேதி முதல் மற்ற முகாம்களைப் போல் இங்கும் 65 ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டு இனிமேல் அந்தத் தொகை வழங்கப்படும்`` என்றார்.
 
இலங்கை