இலங்கையில் ராணுவ ஆட்சிக்கு ராஜபக்சே முயற்சி: மாணவர் ஒன்றியம் புகார்
 
 
கொழும்பு:
 
லங்கையில் ராணுவ அரசை உருவாக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக பல்கலைக்கழக மாணவர்களுக்கு கட்டாய ராணுவப் பயிற்சி அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கூறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
போர் முடிவுக்கு வந்தபின்னரும் பாதுகாப்பு அமைச்சகத்துக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படுவதும், முக்கிய அரசு நிறுவனப் பதவிகளில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் நியமிக்கப்படுவதும் இலங்கை ராணுவமயமாகி வருவதை உறுதிப்படுத்துவதாக உள்ளது என்று அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பொதுச்செயலர் உதுல் பிரேமரத்ன குற்றம் சாட்டியிருப்பதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
 
"நம் நாட்டில் ராணுவத்தில் இருந்து தப்பி ஓடியவர்கள்தான் தற்போது அதிகளவில் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். அப்படி இருக்கும்போது ராணுவப் பயிற்சி வழங்குவதன் மூலம் எப்படி மாணவர்களை ஒழுக்கம் உள்ளவர்களாக உருவாக்க முடியும்?" என்றும் அவர் கேள்வி எழுப்பியிருப்பதாக அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இலங்கை பல்கலைக்  கழகங்களில் படிக்கும் மாணவர்களுக்கு மூன்று வாரங்கள் கட்டாய ராணுவப் பயிற்சி வழங்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் எஸ்.பி. திசநாயக்க ஏற்கெனவே அறிவித்துள்ளார் என்றும் இணையதளத் தகவலில் கூறப்பட்டுள்ளது. 
இலங்கை