சுற்றுலாவை பெருக்க சூதாட்டம்: இலங்கையில் புதிய சட்டம் அமல்

கொழும்பு:
 
லங்கையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அதிகரிக்கும் நோக்கத்தில் சூதாட்ட கிளப்புகள் அமைக்க இலங்கை பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
 
அதிபர் ராஜபக்சேவின் ஆலோசனைப்படி பாராளுமன்றத்தில் இந்த சட்டத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி இந்த சட்டத்தை ராஜபக்சே அரசு நிறைவேற்றியது.
 
இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதால், பாலியல் தொழில்  அதிகரிக்கும் நிலை  ஏற்பட்டுள்ளது. இது ஓழுக்கக் கேட்டுக்கு வழிவகுக்கும், இது நாட்டின் வளர்ச்சிக்கு கேடு செய்யும் என்று எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
 
இந்த சட்டத்தை திரும்பப்பெற போராட்டம் நடத்தவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இலங்கை