யாழ் நூலகத்துக்கு செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு தடை

யாழ்ப்பாணம்:
 
யாழ்ப்பாணத்தில் உள்ள புகழ் பெற்ற நூலகத்திற்கு உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் செல்ல தடை விதித்து இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.
 
அண்மையில் யாழ் நூலகத்துக்கு தென் இலங்கையிலிருந்து வந்த சிங்களர்கள் கும்பலாக உள்ளே செல்ல முயன்றுள்ளனர்.  அவர்களை தடுத்து நிறுத்திய நூலக அலுவலர்கள் யாழ் நூலகத்துக்குள் அனுமதிக்க மறுத்தனர். 
 
ஆத்திரம் அடைந்த அவர்கள் அருகில் இருந்த தந்தை செல்வா நினைவுச்சின்னத்தை சேப்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 10 பேர் 10 பேராக  நூலகத்துக்கு செல்ல அனுமதிக்கும்படி நூலகருக்கு அறிவுறுத்தினார்.
 
ஆனால் அடுத்த நாளே யாழ் நூலகத்துக்கு உள்ளநாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.   இந்த தகவல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அதிர்ச்சியடையச் செய்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை