அமைதிப்படையினர் நினைவிடத்தில் இந்திய ராணுவத் தளபதி அஞ்சலி

 

கொழும்பு:
 
 
 
கொழும்புவில் இந்திய அமைதிப் படையினர் நினைவிடத்தில் இந்திய ராணுவத் தளபதி வி.கே.சிங் அஞ்சலி செலுத்தினார். 
 
இந்திய அரசு 1987ல் அனுப்பிய அமைதிப் படையினர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக போரிட்டனர். இதில்  1,165 இந்திய அமைதிப் படையினர் (ஐ.பி.கே.எப்) கொல்லப்பட்டனர். அவர்களுக்காக கொழும்புவில் இலங்கை அரசு சார்பில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. 
 
இந்த நினைவிடத்தில் தற்போது இலங்கையில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ராணுவத் தளபதி வி.கே.சிங் அஞ்சலி செலுத்தினார்.  முன்னதாக இலங்கையில் உள்ள ராணுவ தளங்களை பார்வையிட்ட வி.கே.சிங் இலங்கை ராணுவத் தளபதிகளையும், பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
 
மேலும் இலங்கை அதிபர் ராஜபக்சேவையும் அவர் சந்தித்து இந்திய - இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்புத் தொடர்பான முக்கிய விஷயங்களை பேசியதாக தெரிகிறது.  
இலங்கை