இந்திய ராணுவத் தளபதி இலங்கை சென்றார்
 

கொழும்பு:
 
 
 
ந்திய ராணுவத் தளபதி வி.கே.சிங் 5 நாள் பாதுகாப்பு அமைச்சகப் பயணமாக ஞாயிற்றுக்கிழமை இலங்கை வந்துள்ளார். 
 
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ் தனது 4 நாள் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு வந்துள்ள நிலையில் பாதுகாப்புத் துறை பயணமாக 5 நாள் இந்திய ராணுவத் தளபதி இலங்கை சென்றுள்ளது.
 
இரு நாட்டு ராணுவ ஒத்துழைப்பு விஷயத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.  ராணுவத் தளபதி வி.கே.சிங் தனது மனைவி மற்றும் பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகள் கொண்ட குழு விமானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு கொழும்பு வந்திறங்கியது.   அவர்களை இலங்கை ராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூர்யா தனது மனைவி மற்றும் ராணுவத்துறை உயர் அதிகாரிகள் சகிதமாக வி.கே.சிங் தலைமையிலான குழுவை வரவேற்றனர். 
 
இலங்கையில் தமிழர்களுக்கான புனரமைப்புப் பணிகள் நடைபெற்றுவரும் பகுதிகளை பார்வையிடும் வி.கே.சிங், பின்னர் புலிகள் புதைத்து வைத்துள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளையும் பார்வையிடுகிறார். பின்னர் இலங்கையின் ராணுவ பயிற்சி மையத்தில் இலங்கை ராணுவ உயர் அதிகாரிகளுடன் இருநாட்டு ராணுவ ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.  இரு நாட்டு ராணுவ ஒத்துழைப்பு தொடர்பாக சில முக்கிய முடிவுகள் குறித்தும், ஒப்பந்தங்கள் குறித்தும் வி.கே.சிங் முக்கிய முடிவுகளை எடுப்பார் என்று கூறப்படுகிறது.
இலங்கை