லண்டனில் ராஜபக்சே தங்கிய விடுதியை முற்றுகையிட்ட ஈழத்தமிழர்கள்
லண்டன்:

ங்கிலாந்து தலைநகர் லண்டனில் ராஜபக்சே தங்கிய விடுதியை ஈழத்தமிழர்கள் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
இங்கிலாந்து ராணி எலிசபெத் முடிசூட்டிய 60-வது ஆண்டு நிறைவு வைர விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் பங்கேற்க இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே லண்டன் வருவதாக அறிவிக்கப்பட்டது.
 
இதற்கு இங்கிலாந்து வாழ் ஈழத்தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.   இருந்தும் எதிர்ப்பை மீறி ராஜபச்சே நேற்று இரவு லண்டன் சென்றார். இரவு 8 மணிக்கு லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் அவர் வந்து இறங்கினார். எனவே விமான நிலைய வரவேற்பாளர் அரங்கத்தில் இங்கிலாந்து வாழ் ஈழத்தமிழர்கள் முற்றுகையிட்டிருந்தனர்.
 
அவர்கள் தமிழீழ தேசிய கொடியான விடுதலைப்புலிகளின் கொடிகளை கைகளில் ஏந்தி உணர்ச்சி பொங்க கோஷங்களை எழுப்பி ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் ராஜபக்சே பார்க்லேன் லண்டன் என்ற முகவரியில் அமைந்துள்ள ஹில்ரன் விடுதி மற்றும் அதன் அருகேயுள்ள டொர்ச்சர் விடுதியையும் சுற்றி முற்றுகையிட்டனர். 
 
பின்னர் கோஷங்களையும் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த போராட்டம் போலீஸ் அனுமதியுடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாளையும் போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ராஜபக்சேவுக்கு எதிரான போர் ஓயப்போவதில்லை. எத்தனை தடவை இங்கு வந்தாலும் அவரை உறுதியுடன் விரட்டியடிப்போம் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஈழத்தமிழர்கள் தெரிவித்துள்ளனர். 
 
நாளை (6-ந் தேதி) நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ளும்படி இங்கிலாந்து வாழ் இலங்கை தமிழர்களுக்கு போராட்ட ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இலங்கை