நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை செயல்படுத்துவோம்: அமெரிக்காவிடம் இலங்கை அமைச்சர் சம்மதம்
கொழும்பு:

ல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை செயல்படுத்துவோம் என்று அமெரிக்காவிடம் இலங்கை அமைச்சர் சம்மதம் தெரிவித்துள்ளார்.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை செயல்படுத்த இலங்கை அதிபர் ராஜபட்ச அலுவலகம் நடவடிக்கை எடுத்து வருவதாக அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

4 நாள் அதிகாரப்பூர்வ பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பீரிஸ் நேற்று 16-ம் தேதி கேபிடல் ஹில் கூட்டத்தில் உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார்.

இனப்பிரச்சினை தீர்விற்கு அனைத்துக்கட்சி குழுவை கூட்டுவது தொடர்பாக ராஜபட்ச - ரணில் இடையே கடந்த திங்களன்று பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் பீரிஸ் கூறினார்.
இலங்கை