மக்களோடு மக்களாக புலிகள் வாழந்து வருகின்றனர்: கோத்தபய ராஜபக்சே
கொழும்பு:
 
2009 இறுதிக் கட்ட போரின் போது ராணுவத்தினரிடம் சரணடையாத விடுதலைப் புலி உறுப்பினர்கள், மக்கள் மத்தியில் வாழ்ந்து வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,  புலிகளால் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் தினந்தோறும் மீட்கப்பட்டு வருகின்றன. புலிகளில் சரணடையாதவர்கள் யார் யார் என்பது இன்னமும் தெரியவில்லை. இவ்வாறு சரணடையாமல் மக்களுடன் மக்களாக புலி உறுப்பினர்கள் வாழந்து வருவது நாட்டுக்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.

பல நாடுகளில் இயங்கி வரும் சில அமைப்புகள் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்த முயற்சி எடுத்து வருகின்றன எனத் தெரிவித்தார்.
இலங்கை