பார்வதியம்மாளுக்கு இந்தியாவில் சிகிக்சை பெறும் திட்டம் இல்லை: மத்திய அரசு


சென்னை:


``பார்வதியம்மாளுக்கு இந்தியாவிற்கு வந்து சிகிச்சைப் பெறும் திட்டமில்லை” என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.  

விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் கடும் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

மலேசியாவில் சிகிச்சைப் பெற்றுவந்த அவர் மேல் சிகிச்சைக்காக இந்திய அரசின் விசா பெற்று சென்னைக்கு விமானத்தில் வந்தார். அவரை விமானத்திலிருந்து இறங்க அனுமதி மறுத்த இந்திய குடியுரிமை அதிகாரிகள், இந்தியாவில் அவர் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அதே விமானத்தில் மலேசியாவிற்குத் திருப்பியனுப்பினர்.

இதையடுத்து இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் கருப்பன் தாக்கல் செய்த மனுவில்....``80 வயதைக் கடந்து கடும் பக்கவாத நோயினால் அவதிப்பட்டுவரும் பார்வதியம்மாளுக்கு இந்தியாவில் தங்கிச் சிகிச்சை அளிக்க விசா வழங்கிவிட்டு அவரை விமானத்திலிருந்து  இறங்க விடாமல் மலேசியாவிற்கே திருப்பியனுப்பியது சட்டவிரோதம்.

எனவே அவரை இந்திய அரசே அழைத்து வந்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்" என்று மனு தாக்கல் செய்தார். இதை ஏற்றுக்கொண்டு விசாரணை செய்த நீதிபதிகள் தர்மாராவ், சசிதரன் பென்ச் பார்வதியம்மாளை இந்தியாவில் சிகிச்சைப் பெற அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை அனுமதிப்பது குறித்து இந்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் இந்தியாவில் சிகிச்சைப் பெற விரும்புகிறாரா என்பதை அவரை சந்தித்து கேட்டு அதன் விபரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது மத்திய அரசு சார்பில் வங்கதேசத்துக்கான இந்திய வெளியுறவுச் செயலாளர் சுமிதா தாக்கல் செய்த பதில் மனுவில்....``இலங்கையில் கொழும்பு நகரில் உணவு விடுதியில் தங்கியிருந்த பார்வதியம்மாளை இந்திய  தூதரக அதிகாரி  வில்லிபுத்தூர் தங்கவேலு விஸ்வநாதன் இந்திய அரசு சார்பில் கடந்த மே 11 ஆம் தேதி சந்தித்து இந்தியாவில் தங்கி சிகிச்சைப் பெற விசா வழங்க தயாராக உள்ளோம்.

வருகிறீர்களா என்று கேட்டார். இதை பார்வதியம்மாள் சுயநினைவுடன் கேட்டுவிட்டு பதில் எதுவும் சொல்லவில்லை. மறுநாள் பார்வதியம்மாளுடன் இருந்த சம்பந்தனிடம் இது குறித்து கேட்டோம். அதற்கு தற்போதைக்கு பார்வதியம்மாள் இந்தியாவில் தங்கி சிகிச்சைப் பெறுவதைத் தள்ளிவைத்துள்ளார்.

எதிர்காலத்தில் தேவைப்பட்டால் சொல்கிறோம்" என்று தெரிவித்தார். இவ்வாறு சுமிதா மனு தாக்கல் செய்திருந்தார்.   இந்த பதில் மனுவை பெற்றுக்கொண்ட நீதிபதிகள் தர்மராவ், சசிதரன் பென்ச் இதன் மீதான விசாரணை நாளைக்கு (ஜூலை-7)க்கு தள்ளிவைத்தனர்.
இலங்கை