இந்தியர்கள் மீன்பிடிக்க அனுமதிக்க மாட்டோம்: இலங்கை மிரட்டல்
கொழும்பு:
 
லங்கைக் கடல்பகுதியில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்க மாட்டோம் என்று அந்த நாட்டு  மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடல்பகுதியில் மீன்பிடிக்க அனுமதிக்குமாறு இந்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

இரு நாடுகளுக்கும் இடையில் நிலவி வரும் மீனவர் தொடர்பான பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே இலங்கை அரசின் நிலைப்பாடாகும். இந்திய சிறைகளில் 36 இலங்கை மீனவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
 
அதேபோல் இந்திய மீனவர்கள் 8 பேர் இலங்கை சிறைகளில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மீனவர்களை விடுதலை செய்வது தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என ராஜித சேனாரட்ன குறிப்பிட்டுள்ளார்.
 
இலங்கை