கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றாத இலங்கை அரசு: சம்பந்தன்
கொழும்பு:
 
லங்கை பிரச்னை சர்வதேச அளவில் வெடித்ததற்கு காரணம் கொடுத்த வாக்குறுதிகளை இலங்கை அரசு காப்பாற்றாததுதான்.
 
இலங்கைத் தமிழர்களின் பிரச்னையைத் தீர்க்க சகலவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்தார்.

பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்ற தந்தை செல்வாவின் நினைவுப் பேருரை நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி உரையாற்றும்போது அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், நாங்கள் எங்களின் பிரச்னைகளை வாஷிங்டன், தில்லிக்கு சென்று சர்வதேசமயமாக்கவில்லை. மாறாக இங்கேயேதான் போராடுகிறோம்.
 
பிரச்னை சர்வதேச அளவில் வெடித்ததற்கு காரணம் கொடுத்த வாக்குறுதிகளை இலங்கை அரசு காப்பாற்றாததுதான். இலங்கையில்தான் நாங்கள் பேச்சு நடத்துகிறோம்.
 
அதன்மூலம் தீர்வு கிடைக்காவிட்டால் அதன்பின்னர் சகல நடவடிக்கைகளையும் எடுக்க நேரிடும் எனக் குறிப்பிட்டார்.
இலங்கை