போர்க்குற்றவாளி ராஜபக்சேவிடம் கேள்வி எழுப்புங்கள்: தென்கொரிய அதிபரிடம் ருத்திரகுமாரன் கோரிக்கை
கொழும்பு:
 
தென்கொரியாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், தமிழர்கள் மீதான போர் குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பில், அவரிடம் கேள்வியெழுப்புங்கள் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் ருத்திரகுமாரன் தென் கொரிய அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நான்கு நாள் பயணமாக ராஜபக்சே தலைமையிலான குழுவினர் தென் கொரியாவுக்கு சென்றுள்ள நிலையில்ருத்திரகுமாரன் தென் கொரிய அதிபர் லீ மியுங் பேக்குக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியியுள்ளார்.

போரின் இறுதி ஐந்து மாதங்களில் மட்டும் 40,000 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதை ஐ.நா.வின் புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டியுள்ளதை தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள ருத்திரகுமாரன், ராஜபக்சேவின் கீழ் உள்ள ராணுவத்தினரே, இப்படுகொலைகளை மேற்கொண்டுள்ளதோடு, பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளிலும் ஈடுபட்டுள்ளனர் என தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். 
இலங்கை