மங்காத்தா அஜித் லுக் ரகசியம்!
தல அஜீத்தின் அதிரடி ஆக்‌ஷன் தர்பார் அரங்கேற இருக்கும் `மங்காத்தாவில், அஜித்தின் ‘சால்ட் அண்ட் பெப்பர் லுக்கின் முன்மாதிரி யார் என்ற ரகசியத்தை நமக்கு ஸ்கூப் தகவலாக சொன்னார் வெங்கட் பிரபு.

“அஜித்துக்கு இந்தப் படத்தில் இரண்டுவிதமான கேரக்டர்கள். இதில் ரசிகர்களிடம் கிளாப்ஸ் வாங்க இருப்பது, கிரே ஷேடில் அஜித் நடித்திருக்கும் எதிர்மறை கதாபாத்திரத்துக்காகத்தான். இந்த கேரக்டரை வில்லன் என்றும் சொல்ல முடியாது. வில்லன் இல்லை என்றும் சொல்ல முடியாது. அப்படியொரு அசத்தல் கதாபாத்திரம். அஜித்தின் கிரே ஷேட் கேரக்டருக்கு என்ன லுக்கை உருவாக்கலாம் என்று பார்த்தபோது.. என் மனதில் வந்து நின்றவர் ஹாலிவுட் நடிகர் ‘ ஜார்ஜ் க்ளூனி. இவரது ஹேர் ஸ்டையே அஜித்துக்கு மாற்றியிருக்கிறோம்” என்கிறார்,

“ அதேபோல மங்காத்தா படம் ஒரு வெளிநாட்டு படத்தின் தழுவல் என்று செய்திகள் வெளியானது ஆனால் உண்மை அதுவல்ல. மங்காத்தா படம் எந்த படத்தின் ரீமேக்கும் அல்ல.

ஒவ்வொரு படமும் ஏதாவது ஒரு படத்தில் வரும் காட்சி அல்லது கதையின் தாக்கத்தினால்தான் படைக்கிறோம்.  ஆனால் அதை நாம் எவ்வாறு படைக்கிறோம் என்பது தான் முக்கியம். நிஜ வாழ்க்கையின் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு உருவாக்கிய படம் `சென்னை -28`, நிறைய த்ரில்லர் படங்கள்  பார்த்த தாக்கத்தினால் உருவான படம் `சரோஜா`, ரொமாண்டிக் காமெடி கதைகளின்  தாக்கத்தில் உருவான படம் `கோவா`.  `மங்காத்தா` படம் எதன் தாக்கத்தில் உருவானது என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்” என்றவர் அஜித்துக்கான ஓப்பனிங் பைட்டும், இந்த படத்தில் இடம்பெறும் வங்கிக் கொள்ளையும் பேசப்படும்” என்கிறார்.

ஜுலை மாதம் இறுதியில் மங்காத்தா படத்தின் இசை வெளியாக இருக்கிறது. ஆனால் தேதி இன்னும் முடிவாகவில்லை" என்கிறார் வெங்கட் பிரபு!
 
திரை தெனாலி


 

 

   தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும் * Indicates mandatory fields   

Name* :
E-Mail_id* :
Phone No :
Address :
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comments(500)* :
 
 

கருத்துக்கள்