நீங்களா நீயூஸ் போட்டா எப்படி? - ஓவியா

கோதுமை அழகிகளுக்கு இணையாக கோலிவுட்டை ஆட்சி செய்வதில் சளைத்தவர்கள் அல்ல கேரளக்கிளிகள்! சிரித்தால் , பேசினால், நடந்தால் ஏன் தும்மினால்கூட ஒரு லைவ்வான பெயிண்டிங் போலத்தான் இருக்கிறார் ஓவியா. சமீபத்தில் ராசு மதுரவனின் முத்துக்கு முத்தாக படத்தில் இருந்து அதிக ஊதியம் கேட்டார் என்று சொல்லி அதிரடியாக படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக செய்திகள் வர அதிலிருந்தே ஆரம்பித்தோம் முதல் கேள்வியை…

அறிமுகமான படம் ஹிட் ஆனதும், அதுக்கு முன்னமே ஒத்துகிட்ட முத்துக்கு முத்தாகப் படத்துல நடிக்க அதிகம் சம்பளம் கேட்டதால் படத்துலேர்ந்து உங்கள தூக்கிட்டாங்களாமே?

மூனுநாள் முன்னாடி பல் துலக்கிட்டு இங்க பாருன்னு அம்மா கொடுத்த இங்கிலீஷ் நீயூஸ் பேப்பர பார்த்தேன். என்ன படத்துலேர்ந்து டைரக்டர் தூக்கிட்டதா போட்டுருந்தாங்க. நான் விழுந்து விழுந்து சிரிச்சேன்! ஏன்னா முதல்நாள் நைட்தான் ராசு மதுரவன் சார் வந்து என்னோட கேரக்டருக்காக ஃப்ரீ ஹேர் விடனும்ன்னு சொல்லிட்டுப் போனார். முத்துக்கு முத்தாக படத்துல நான் சென்னை காலேஜ் கேர்ளா நடிக்கிறேன். வில்லேஜ்லேர்ந்து வந்து சென்னை ஐடி பார்க்ல வேலை செய்ற ஹரீஷ் என்ன லவ் பண்றார். களவாணியிலேர்ந்து அப்படியே காண்ட்ராஸ்ட்டான கேரக்டர் இதுல. ஆகஸ்ட் செகண்ட்லேர்ந்து சென்னையில நான் சம்பந்தப்பட்ட சீன்ஸ் சூட் பண்றாங்க.

இந்தப் படத்துல மோனிகாவும் இருக்காங்களே அப்போ நீங்க செகண்ட் ஹீரோயினா?

டபுள் ஹீரோயின் கதை இது. ரெண்டு பேருக்குமே இம்பார்ட்டன்ஸ் இருக்கு. நீங்க சிண்டு முடியலாம்னு பார்த்தீங்களா! டைரக்டர் முதல்லய்யே சொன்னார். இந்தமாதிரி கேப்பாங்க. கேர்ஃபுல்லா பதில் சொல்லும்மாண்ணு.

இவ்வளோ எச்சரிக்கையா இருக்குற நீங்க..அப்புறம் ஏன் மலையாள படங்கள் சுத்த போர். அங்க வயசானாத்தான் நடிக்க முடியும்ன்னு உளறுனீங்க?

இதுவும் என்னை கேட்காம எழுதினதுதான். நான் பிரஸ் மீட்ல என்ன சொன்னேன்னா… மலையாளப் படங்கள்ல முதல் வாய்ப்பு வாங்குறது ரொம்ப கஷ்டம். அது தமிழ்ல கிடைக்குதுன்னு சொன்னேன். அப்படியே பிளேட்டையே மாத்தி விட்டுட்டாங்க.

ஆனா நீங்க அறிமுகமானது ஒரு மலையாளப் படத்துலதானே?

ஆமா! நிதின் டைரக்ட் பண்ண ‘அபூர்வா’ படத்துல நடிச்சேன். டைரக்டர் ஜஸ்ட் செவண்டீன் இயர் ஒல்டு. விமலா ராமனத் தவிர டீம்ல நாங்க எல்லோருமே சின்ன பசங்கதான். ஆனால் அந்தப் படம் பிளாப். இனிமே தைரியமா சொல்லிக்குவேன். களவாணிதான் ஹிட் ஆயிடுச்சே! 

முதலில் ஒரு லட்சம் சம்பளம் பேசிட்டு இப்போ பதினஞ்சு லட்சம் சம்பளம் கேட்டீங்களாமே? இயக்குனருக்கு உங்களால ஹார்ட் அட்டாக் வந்துருந்தா என்ன பண்ணியிருப்பிங்க?

இப்போ எனக்குதான் ஹார்ட் அட்டாக் வரும்ன்னு நினைகிறேன். களவாணி நடிச்சிட்டு இருக்கும்போதுதான் ராசு மதுரவன் சார் வந்து எவ்வளவு சம்பளம் வேணும்ன்னு கேட்டார். எனக்கு இப்போதைக்கு நல்ல கேரக்டர்தான் முக்கியம்ன்னு சொன்னேன். அது கிடைச்சிருக்கு. நான் கேட்காமலேயே நல்ல சம்பளம் கொடுத்துருக்கார். அதுக்குள்ள யாரையும் கேட்காம நீங்களாவே செய்தி போட்ட எப்படி?

சரி, எவ்வளவு சம்பளம்ன்னு சொல்லுங்க?

ஆங்ங்…! அதெல்லாம் சொல்ல முடியாது. மம்மி அலோவ் பண்ண மாட்டாங்க.

அப்போ உங்க வயசு எவ்வளவுன்னு சொல்லுங்க..

 ஓ ஷ்யூர்! ஐ யம் இன் எய்டீன்!

நடிப்பில் யார் ரோல் மாடல்?

ஸ்கூல் பேன்ஸி டிரஸ் காம்படிஷன்ல ஆக்ட்ரஸ் வேஷம் போட்டேன். அப்போ சம்யுக்தா வர்மா ரொம்ப பிடிக்கும். இப்போ அசின் என்னோட ரோல் மாடல்.

அசின் இலங்கைக்கு படப்பிடிப்புக்காக போயிட்டு, வவுனியாவுக்கு ராஜபக்‌ஷே மனைவியோட போனது தெரியுமா?

ஓ தெரியுமே! ஷி ஈஸ் ரியலி அமேஸிங்!

என்ன விளையாடுறீங்களா? அசின் ஸ்ரீலங்கன் அம்பாசிடர் மாதிரி நடந்துகிட்டதுல இங்க இருக்க தமிழ் ரசிகர்கள் அசின் மேல ரொம்ப கோவமா இருக்காங்க. அது தெரியுமா?

அய்யோ! அது தெரியாது. அப்போ அசினப்பத்தி நான் சொன்னத எடிட் பண்ணிடுங்கண்ணா ப்ளீஸ்!

ஒகே! ஸ்கூல் டைம்ல உங்களுக்கு எத்தன பாய் ஃப்ரண்ட்ஸ்?

என்னோட க்ளாஸ்மெட்ஸ் இப்பவும் எனக்கு ஃப்ரண்ட்ஸ்தான்.

களவாணி விமல் கூட நல்ல கடலை போடுவீங்களாமே?

எனக்கு எப்பவும் உம்முன்னு இருக்க பிடிக்காது. முதல் பத்து நாள்தான் உம்முன்னு இருந்தேன் அப்புறம் ஒரே அரட்டைதான். விமல் நிஜமாவே ஜாலி டைப். பேசிக்கிட்டே இருக்கலாம். அவர்கிட்ட பந்தால்லாம் இருக்காது. மன்னார்குடி ஷூட்டிங்ல ஒரு நாள் பழஞ்சாதம், ஆனியன், கிரீன் சில்லி சாப்பிட்டார் பாருங்க… ஆடிப்போயிட்டேன்!

ஆனா நீங்க ரொம்ப பந்தா பண்றீங்களே?

கான்பிடண்டா இருந்தா அப்படித்தான் சொல்வீங்க. பந்தான்னே வச்சுக்கோங்க. ஆனா திமிர்ன்னு போட்டுடாதீங்க.

தமிழ்ல யார் இடத்தை பிடிக்கப் போறீங்க?

எனக்குன்னு ஒரு இடத்தை உருவாக்கப்போறேன். கதை நல்லா இருக்கனும். அதுல என்னோட கேரக்டர் கதையை நகர்துற கேரக்டரா இருக்கணும். பணம் கிடைக்குதுன்னு அதிக நம்பர்ஸ் படத்துல நடிக்க மாட்டேன்.


சந்திப்பு : ஜோதி ஸ்வரூபன்

   தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும் * Indicates mandatory fields   

Name* :
E-Mail_id* :
Phone No :
Address :
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comments(500)* :
 
 

கருத்துக்கள்

Praveen
It is really a splendid effort to have this site on line. thanks